×

கல்லிடைக்குறிச்சியில் பழுதான சாலை சீரமைப்பு

அம்பை :  கல்லிடைக்குறிச்சியில் பழுதடைந்து குண்டும் குழியுமாக கிடந்த புதிய பஸ் நிலையம், அரசு மருத்துவமனைகளுக்கு செல்லும் பிரதான சாலை தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.கல்லிடைக்குறிச்சி நகரின் மையப் பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பஸ் நிலையம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, அரசு கால்நடை மருத்துவமனை, தினசரி சந்தை, காவல் நிலையம், பெட்ரோல் பம்ப் மற்றும் அனைத்து ஆலயங்களுக்கும் சென்று வந்த பிரதான ரோட்டில் தரமற்று அமைக்கப்பட்ட சாலையாலும், மழையால் ஏற்பட்ட குழிகளாலும் மக்கள் நடந்து கூட செல்ல முடியாதபடி மிகவும் மோசமாக காட்சியளித்தது. இதுகுறித்து தினகரனில் கடந்த நவ.17ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சாலையின் இருபுறமும் இருந்த முட்செடிகளை அகற்றி ரோட்டை விரிவுபடுத்தி புதிய சாலை போடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Ambai: The new bus stand, which is in a dilapidated condition, is the main road leading to government hospitals.
× RELATED சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம்...